Vaanam Boomi Yaavatrilum Lyrics
Vaanam Boomi Yaavatrilum Tamil Christian Song Lyrics.
Vaanam Boomi Yaavatrilum Christian Song in Tamil
1. வானம் பூமி யாவற்றிலும்
யேசு மேலானவர்
மனிதர், தூதர், பேய்தானும்
அவர் முன் வீழுவர்.
நான் நம்புவேன், நான் நம்புவேன்
யேசு எனக்காய் மரித்தார்,
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்.
2. இரட்சகர் உயிர் விட்டதும்
எந்தனுக்காகவே;
வெறெந்த மாமன் றாட்டுக்கும்
ஆங்கிட மில்லையே.
3. பாவத்தின் மாளும் யாவர்க்கும்
உயிரளிக்குமே;
பெலனற்ற ஆத்மாவுக்கும்
சக்தி கொடுக்குமே.
4. லோகம் இவ்வன்பின் மாட்சிமை
ருசித்துப் பார்க்காதோ?
மீட்ப ருதிர வல்லமை
வந்து சோதியாதோ?
5. என் மரணப் படுக்கையில்
யேசென்ற நாமத்தை,
பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்
அடைவேன் நித்திரை.
