Vallamai Arul Niraive Vaarum Lyrics
Artist
Album
Vallamai Arul Niraive Vaarum Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Vallamai Arul Niraive Vaarum Christian Song in Tamil
வல்லமை அருள் நிறைவே வாரும்
பின்மாரி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே
1. புது எண்ணெய் அபிஷேகம்
புதுபெலன் அளித்திடுமே
நவமொழியால் துதித்திடவே
வல்லமை அளித்திடுமே
2. சத்திய ஆவியே நீர்
நித்தமும் நடத்திடுமே
முத்திரையாய் அபிஷேகியும்
ஆவியின் அச்சாரமாய்
3. அக்கினி அபிஷேகம்
நுகத்தினை முறித்திடுமே
சத்துருவை ஜெயித்திடவே
சத்துவம் அளித்திடுமே
4. தூய நல் ஆவிதனை
துக்கமும் படுத்தாமல்
தூய வழி நடந்திடவே
பெலன் தந்து காத்திடுமே
5. பெற்ற நல் ஆவிதனை
காத்திட வரம் தாரும்
ஆவியினால் நடந்திடவே
ஆளுகை செய்திடும்
6. உலர்ந்திடும் எலும்புகளும்
உயிர்பெற்று எழும்பிடவே
எழுப்புதலை கண்டிடவே
வல்லமை அளித்திடுமே
Comments are off this post