வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்
வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமையை நான் காண்பேன்
எனக்காக உதவிடும் தேவனே
எம் பாவம் கழுவிட வந்தவரே
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாதம் துடைக்க வந்தார்
பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவும் செய்தவரே
கழுகைப் போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான காரியம் வாஞ்சிப்பேன்
என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே
உம் ஆடையைத் தொட்ட நொடியினிலே
அந்த அநாதையும் சுகம் பெற்றாள்
Comments are off this post