Vinmeen – Anto Renish Rajan Song Lyrics

Vinmeen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Anto Renish Rajan, Jerald Sandeep, Roshan

Vinmeen Christian Song Lyrics in Tamil

விண்மீனின் வருகையோடு
வந்தாரே உலகின் உள்ளே
மாளிகை வேண்டாம் என்று
பிறந்தாரே தொழுவினிலே

இவ்வுலகைப் படைத்த விண்ணவரின் மைந்தர்
இரட்சகராய் நம்மில் உருவானாரே
பாவத்தின் கரங்கள் படுமென்று தெரிந்தும்
மாசில்லா குழந்தை சிரிக்கின்றாரே

பாலைவனம் மேலே தேவமழை போலே
அன்பின் வடிவமாய் பொழிந்தாரே
தூதர் துதி பாட மேய்ப்பர் மகிழ்ந்தாட
தேவன் நமக்காகப் பிறந்தாரே

என்னில் மகிழ்ச்சி பொங்க
நெஞ்சில் உதயமென
இருளை நீக்கும் ஒளியே

குளிரும் பனியினிலே
மாட்டுத் தொழுவத்திலே
மண்ணில் மலர்ந்த மலரே

வெண்நிலவு பொழிந்திட
அவர் அன்பில் நான் மயங்கிட
கால்நடைகள் நிழலிலே
இறையரசனும் உறங்கிட

தூதரோடு நான் பாடிட
மேய்ப்பரோடு நான் போற்றிட
ஞானிகளோடு நான் தொழுதிட
என் உள்ளம் நிறைந்தோடுதே

மாந்தரின் பாவ இருள் போக்க
அவர் ஒளியாய் வந்தாரே
தந்தையோ தனது ஒரே மகனை
அவர் அன்பாய் கொடுத்தாரே

Vinmeen Christian Song Lyrics in English

Vinmeenin varugaiyodu
Vanthaare ulagin ullea
Maaligai vendaam endru
Piranthaare thozhuvinile

Ivvulagai padaiththa vinnavarin mainthar
Iratchagaraai nammil uruvaanare
Paavaththin karangal padumendru therinthum
Maasillaa kuzhanthai sirikkindraare

Paalaivanam mela theva mazhai pola
Anbin vadivamaai pozhinthaare
Thoothar thuthi paada meippar magizhnthaada
Thevan namakkaga piranthaare

Ennil magizhchchi ponga
Nenjil uthayamena
Irulai neekkum oliye

Kulirum paniyinile
Maattu thozhuvaththile
Mannil malarntha malare

Vennilavu pozhinthida
Avar anpil naan mayangida
Kaalnadaigal nizhalile
Iraiyarasanum urangida

Thootharodu naan paadida
Meipparodu naan potrida
Gnaanigalodu naan thozhuthida
En ullam niranthoduthe

Maantharin paava irul pokka
Avar oliyaai vanthaare
Thanthaiyo thanathu orea maganai
Avar anpaai koduththaare

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post