Nilaavae Vaaraai Christmas Song Lyrics

Nilaavae Vaaraai Tamil Christmas Song Lyrics Sung By. Ratheesh Amirvin, Joy Ratheesh.

Nilaavae Vaaraai Christian Song Lyrics in Tamil

நிலாவே வாராய்
வணங்கிட வாராய்
அன்பெனும் தேவன்
அருள் பெற வாராய்
ஆனந்த கீதம் பாடிட வாராய்
ஆண்டவர் மகனை காண வாராயோ நீ..

நினைக்க நினைக்க இன்பம் பொங்கும் மகிமை காண வா
துதிக்க துதிக்க கிருபை பெருகும் புகழை பாடவா
தேவன் படைத்த உலகில் தேவ மகிமை காண வா
இருளடைந்த உலகில் புதிய ஒளியை காண வா
கர்த்தரின் பாசம் வான் வரை வீசும்
தகப்பனின் நேசம் ஆனந்த வாசம்

பாவ உலகின் சாபம் போக்க பிறந்த பாலகன்
மனித குலத்தின் மீட்பை பெற உதித்த மாபரன்
தேவ அன்பை நமக்கு உணர்த்த எழையானவர்
நித்ய ஜீவன் நமக்கு தந்த இரட்சகர் அவர்
வானவர் வாழ்த்த
தூதர்கள் போற்ற மானுட மீட்பர் மானிடனானார்

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post