Kartharin Vallamai Song Lyrics

Kartharin Vallamai Song Lyrics From Tamil Christian Song Sung By. Shrenika Suresh.

Kartharin Vallamai Christian Song Lyrics in Tamil

கர்த்தாவே மாட்சிமையும் வல்லமையும் உம்முடையதே
மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையதே

எல்லாம் உம்மால் உண்டானது
எல்லோருக்கும் தலைவராய் இருக்கின்றீர்
முடியாதவைகளை முடித்துக் காண்பிப்பவர்

உம் வல்லமைக்கு நிகரே இல்லை !
உம் வல்லமை அனைத்தையும் மாற்றிடுமே !

உம் கரத்தினால் பூமியை உண்டாக்கினீர்
உம் வலது கை வானங்களை அளவிட்டது
உம் சத்தத்தினால் தண்ணீரை உண்டாக்கினீர்
உம் வல்லமையால் தென்றலை வீசச்செய்வீர்

இடிமுழக்கங்களோடு வரும் மின்னல்களுக்கு வழிகளை பகுத்தவர் நீர்
சமுத்திரத்தை குலுக்குகிற சேனைகளின் தேவன் நீர்

உம் வல்லமைக்கு நிகரே இல்லை !
உம் வல்லமை அனைத்தையும் மாற்றிடுமே !

நீரே பெரியவர் உமது நாமம் பெரிதே
சர்வ வல்லவர் உமது ராஜ்யம் வாழ்கவே
உம் பரிசுத்தம் ஆலயத்தின் அலங்காரமே
உம் நீதி நியாயம் சிங்காசனத்தின் ஆதாரமே

கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறீர்
சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறீர்
கர்த்தர் மாறாதவராய் இருக்கிறீர்
அன்பாய் இருக்கிறீர் தேவன் என்றாலே அன்புதான்..

உம் அன்பிற்கு நிகரே இல்லை !
உம் அன்பு அனைத்தையும் மாற்றிடுமே !

தேவரீர் உம் பெலத்தினாலும் வல்லமையினாலும் வானத்தையும்
பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கினீர்.
உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post