Anupa anto – Mella Mella Kannai Song Lyrics
Mella Mella Kannai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Anupa anto
Mella Mella Kannai Christian Song Lyrics in Tamil
மெல்ல மெல்ல கண்ணை
சிமிட்டும் சின்ன பாலகா.
எந்தன் கண்ணில் உன்னை
இன்று காண போகிறேன்.
கள்ளமில்லா உன் சிரிப்பின் கொள்ளை அழகிலே
எல்லையில்லா பேரின்பத்தில் அகமகிழ்கிறேன்
என் இயேசு பாலா இம்மானுவேலா என்னோடு வந்து கொஞ்சி விளையாடு
உலகத்தின் மீட்பே இணையில்லா அன்பே
மண்ணகம் வந்து வாழு எம்மோடு
மண்ணகம் வந்து வாழு எம்மோடு
பெத்தலகேம் ஊரிலே கடுங்குளிர் இரவிலே
கன்னிமரி கர்ப்பத்தில் புல்லணையில் பிறந்தாரே.
காபிரியேல் கூறிய நல்ல செய்தி கேட்டதும்
இடையர்கள் மகிழ்ந்தனர்
பாலனை வணங்கினர்.
வான்வெளியில் விண்மீனோ வழியை காட்டவே
ஞானிகளோ இயேசுவை காண விரைந்தனர்.
வான தூதர் சேனைகளோ மீட்பரைக் கண்டு
மகிழ்ச்சியின் கீதங்கள் பாடி மகிழ்ந்தனர்
என் இயேசு பாலா இம்மானுவேலா
எம் உள்ளமெங்கும் நீயே நிறைந்திடு
எம் உலகை மகிழ்ச்சியினால் நிரப்பிடு
கன்னி மரி மடியிலே இயேசு பாலன் தவழ்கிறார்
அன்பு கரம் நீட்டியே அணைக்கலாம் வாருங்கள்.
உன்னதத்தில் மகிமையே மண்ணகத்தில் அமைதியே
நம்மிடையே வாழ வந்த மீட்பரை காணுங்கள்
இருளினை ஒளியினால் எங்கும் நிறைத்து
மன்னவன் இயேசுவை மகிழ்ந்து பாடுங்கள்
மழலையாய் தவழும் நம் பாலன் இயேசுவை
மாசற்ற மனதுடன் புகழ்ந்து போற்றுங்கள் – என் இயேசு பாலா
Mella Mella Kannai Christian Song Lyrics in English
Mella mella kannai
Simittum kannil unnai
Indru kaana pokiren
Kallamilla un sirippin kollai azhagile
Ellaiyilla perinpaththil aga magizhkiren
En yesu pala immanuvela ennodu vanthu konji vilaiyadu
Ulagaththin meetpe inaiyilla anpe
Mannagam vanthu vazhu emmodu
Mannagam vanthu vazhu emmodu
Bethlagem oorile kadunkulir iravile
Kannimari karppaththil pullanaiyil piranthare
Kapiriyel kooriya nalla seithi kettathum
Idaiyargal magizhnthanar
Palanai vananginar
Vanveliyil vinmeeno vazhiyai kattave
Gnanigalo yesuvai kana virainthanar
Vana thoothar senaigalo meetparai kandu
Magizhchchiyin geethangal padi magizhnthanar
En yesu pala immanuvela
Em ullamengum neeye nirainthidu
Em ulagai magizhchchiyinal nirappidi
Kanni mari madiyile yesu palan thavazhkirar
Anpu karam neettiye anaikkalam varungal
Unnathaththil magimaiye mannagaththil amaithiye
Nammidaiye vazha vantha meetparai kanungal
Irulinai oliyinal engum niraiththu
Mannavan yesuvai magizhnthu padungal
Mazhalaiyai thavazhum nam palan yesuvai
Masatra manathudan pugazhnthu potrungal – En yesu pala
Comments are off this post