David Alfred – Parousia Song Lyrics

Parousia Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.David Alfred

Parousia Christian Song Lyrics in Tamil

உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்
மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார் -(2)

கல்லறை கதவுகள் திறந்து போனதே
சாவின் பயங்கரம் மறைந்து போனதே
மரணத்தை பாதாளத்தை ஜெயித்து எழுந்தாரே

உயிரோடு எழுந்தவரை
மரித்தோரிடத்தில் தேடல் என்ன?
மூன்றாம் நாள் எழுவேனன் அவர்
சொன்னதை மறந்ததென்ன? – (2)
சொன்னபடியே செய்தார்
வெற்றி முழங்க செய்தார்
சாட்சி விளங்க செய்தார்
என் இயேசு உயிரோடிருக்கிறார்

தீர்க்கர்கள் உரைத்ததை நம்பாமல்
மறந்தது என்ன?
விசுவாசியாமல் இதயம் மந்தமாகி
போனதென்ன? – (2)
கண்கள் தெளிய செய்தார்
இதயம் மகிழ செய்தார்
சாட்சி விளங்க செய்தார்
என் இயேசு உயிரோடிருக்கிறார்

வானத்தை அண்ணாந்து
பார்த்தபடி நிற்பதென்ன?
ஆண்டவர் கட்டளையை
மறந்து சும்மா நிற்பதென்ன? – (2)
உலகம் எங்கும் போங்கள்
எல்லோரையும் சீஷராக்குங்கள்
சாட்சி விளங்க செய்யுங்கள்
என் இயேசு சீக்கிரம் வருகிறார்

மேகங்கள் திறக்க எக்காள தொனியோடே
தூதர்களோடே ஆரவாரத்தோடு
ராஜாதி ராஜனாய் ஆளுகை செய்யவே – (2)

Parousia Christian Song Lyrics in English

Uyirthezhunthaar jeyithezhunthar
Moondraam naalile uyirthezhunthaar-2

Kallarai kathavugal thiranthu ponathe
Savin payangaram marainthu ponathe
Maranathai pathalaththai jeyithu ezhunthare

Uyirodu ezhunthavarai
Marithoridathil thedal enna?
Moondraam naal ezhuvenan avar
Sonnathai maranthathenna? -2
Sonna padiye seithaar
Vetri muzhanga seithaar
Satchi vilanga seithaar
En iyesu uyirodirukkiraar

Theerkkargal uraiththathai nampamal
Maranthathu enna?
Visuvasiyamal ithayam manthamagi
Ponathenna? – 2
Kangal theliya seithaar
Ithayam magizha seithaar
En iyesu uyirodirukkiraar

Vaanaththai annaanthu
Parthapadi nirpathenna?
Aandavar kattalaiyai
Maranthu summa nirpathenna? -2
Ulagam engum pongal
Elloraiyum seesharakkungal
Satchi vilanga seiyungal
En iyesu seekkiram varukiraar

Megangal thirakka ekkaala thoniyode
Thoothargalode aaravaraththodu
Rajathi rajanaai aalugai seiyave-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post