Jaamakaaranai Ezhunthu Jebipom Christian Song Lyrics

Jaamakaaranai Ezhunthu Jebipom Tamil Christian Song Lyrics From The Album Vasantha Vaazhvu Sung By. Peter Richard, Augustin Rajasekar.

Jaamakaaranai Ezhunthu Jebipom Christian Song Lyrics in Tamil

ஜாமக்காரனாய் எழுந்து ஜெபிப்போம்
இந்திய தேசத்தை காப்போம் (2)

1. விழிப்புள்ள ஆவியோடு கண்களை ஏறெடுப்போம்
உறங்காமல் தூங்காமலே இரவெல்லாம் விழித்திடுவோம்
தேசத்தின் நன்மைக்காக திறப்பிலே நின்றிடுவோம்
அழுகின்ற மக்களுக்காய் கண்ணீரை சிந்திடுவோம் – நாம் (2)

2. சபைகளின் உயிர் மீட்சிக்காய் உருக்கமாய் ஜெபித்திடுவோம்
விசுவாச கூடத்திற்காய் பாசமாய் ஜெபித்திடுவோம்
ஊழியர் ஒற்றுமைக்காய் உண்மையாய் ஜெபித்திடுவோம்
வருகையில் காணப்பட விழிப்போடு ஜெபித்திடுவோம் – இயேசு (2)

3. தேசத்தை ஆழ்பவர்க்காய் மறவாமல் ஜெபித்திடுவோம்
அதிகாரம் உடையவர்க்காய் அவசியம் ஜெபித்திடுவோம்
ஏழைகள் எளியவர்க்காய் உருக்கமாய் வேண்டிடுவோம்
நியாயங்கள் நிலைத்திடவே விண்ணப்பம் செய்திடுவோம் (2)

4. சாத்தானின் கொடைகளை ஜெபத்தாலே தகர்த்திடுவோம்
வஞ்சக ஆவிகளை இயேசு நாமத்தில் விரட்டிடுவோம்
கட்டுண்ட மக்களையே தேவன் பக்கமாய் திருப்பிடுவோம்
கர்த்தரே தேவம் என்று முழங்கிட செய்திடுவோம் – நம் (2)

Other Songs from Vasantha Vaazhvu Album

Comments are off this post