Mannil Vanthu Malarntha Christmas Song Lyrics
Artist
Album
Mannil Vanthu Malarntha Tamil Christmas Song Lyrics.
Mannil Vanthu Malarntha Christian Song Lyrics in Tamil
மண்ணில் வந்து மலர்ந்த
விண்ணகத்து மலரே (2)
உன்னை பாடி பாடி போற்றிடுவோம்
தினம் தேடி வந்து தொழுதிடுவோம்
விண்ணில் மகிமை மண்ணில் அமைதி (2)
என்றென்றும் உண்டாக பிறந்தாயோ நீ
1. வான தூதர் சேனை வானில் தோன்றி
உந்தன் மாண்பை சொல்லி மகிழ்ந்தார்
ஆயர் செய்தி கேட்டு மாட்டுத்தொழுவம் வந்து
பாலன் உன்னை பணிந்தார்
புல்லணையிலே மகிமை கண்டனர்
முன்னணியில் மகிழ்வை பெற்றனர் (2)
பாவியாம் எம்மை மீட்கவே
பாவம் யாவும் போக்கவே
பாரில் வந்த இயேசு தேவமே
2. வானம் பாடியாக வாழ்த்து பாடி
உந்தன் வாசல் தேடி வருவேன்
கானம் பாடி உந்தன் மேன்மை யாவும் சொல்லி
பாதம் பணிந்து மகிழ்வேன்
உம்மை போலவே தேவம் இல்லையே
உண்மையான தேவம் இல்லையே (2)
பாவியாம் எம்மை மீட்கவே
பாவம் யாவும் போக்கவே
பாரில் வந்த இயேசு தேவமே
Comments are off this post