Isha Saju – Naan Thirumbina Song Lyrics
Naan Thirumbina Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Isha Saju, Sabitha Jasmine
Naan Thirumbina Christian Song Lyrics in Tamil
ஆஆஆஆ…
நான் திரும்பின திசை எங்கும் தோல்விகள்
நான் விரும்பின வழி எங்கும் ஏமாற்றங்கள்
வார்த்தைகள் தந்த வேதனைகள்
சூழ்நிலைகள் தந்த சோர்வுகள்
இயேசுவே.. இயேசுவே.. என் நல்ல தகப்பனே..
மெய்யன்பை அறிந்த பின்னும் வழி மாறினேன்
பொய்யன்பை நாடியே திக்கற்ற பிள்ளையாய்
நெஞ்சம் நொந்து உம் தஞ்சம் வேண்டி
உம் பாதம் முன்னே கெஞ்சி நிற்கிறேன்
1.கண்கள் ஒன்றிலே தூசு பட்டாலே
கதிகலங்கி போகும் பாச தகப்பனே
கருவிழி கரைய நான் கதறி நிற்கிறேனே
மனமிரங்க நீங்க மறுப்பதேனப்பா
தேம்பும் எந்தன் உள்ளம்
வாடும் எந்தன் நெஞ்சம் என்று
நீரறிந்து மார்போடு அணைத்து கொள்வீர்
வாழ்வில் தனிமை உணர்ந்தேன்
நீரே தஞ்சம் என்றேன்
தோளில் என்றென்றும் என்னை
நீர் தூக்கி சுமந்தீர்….
2.நிம்மதி இழந்து நான் தவித்து நிற்கிறேனே
அழுது அழுது நான் துடி துடித்தேனே
மனம்பதறியே நான் பைத்தியமானேன்
உள்ளம் உடைந்து நான் சாவை விரும்பினேன்
எந்தன் பக்கம் வந்தீர்
எந்தன் கண்ணீர் துடைத்தீர்
எனை அரவணைத்து
தோள் தந்து ஆறுதல் தந்தீர்
உந்தன் வார்த்தை தந்து
எந்தன் காயம் ஆற்றி
உம்மில் என்றென்றும்
என்னை நீர் வாழ செய்தீர்…
Love Christian Song Lyrics in English
Aaa…Aaa…Aaa…Aaa….
Naan Thirumbina Thisai engum tholivigal
Naan virumpina vazhi engum ematrangal
Vaarthaigal thantha vethanaigal
Soozhnilaigal thantha sorvigal
Yesuvea yesuvea en nalla thagappane
Meiyyanpai arintha pinnum vazhi maarinen
Poiyanbai naadiye thikkatra pillaiyaai
Nencham nonthu um thancham vendi
Um paatham munnea kenji nirkirean
1.Kangal ondrile thoosu pattaale
Kathi kalangi pogum paasa thagappane
Karu vizhi karaiya naan kathari nirkirene
Manamiranga neenga maruppathenappa
Thempum enthan ullam
Vaadum enthan nenjam endru
Neerarinthu maarpodu anaiththu kolveer
Vazhvil thanimai unarnthen
Neere thanjam endrean
Tholil endrendrum ennai
Neer thookki sumantheer
2.Nimmathi izhanthu naan thaviththu nirkirene
Azhuthu azhuthu naan thudi thudiththene
Manam pathariye naan paiththiyamaanen
Ullam udainthu naan saavai virumpinen
Enthan pakkam vantheer
Enthan kanneer thudaiththeer
Ennai aravanaithhtu
Thol thanthu aaruthal thantheer
Unthan vaarththai thanthu
Enthan kaayam aatri
Ummil endrendrum
Ennai neer vaazha seitheer




Comments are off this post