Raja – Appa Pithave Song Lyrics
Appa Pithave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Raja, Manoj
Appa Pithave Christian Song Lyrics in Tamil
உம்மைப் போல யாரும் இல்லை
உந்தன் அன்புக்குஈடே இல்ல
நீர் என்னோடு இருப்பதினாலே
உலகில் எந்த பயமும் இல்லை -2
அப்பா பிதாவே அப்பா பிதாவே
அப்பா பிதாவே அன்பு நேசரே
ஆயுள் முழுதும் கூட
இருக்கும் ஆத்தும நேசரே -2
1.உன்னதத்தில் உயர்ந்தவரே
உலகையாளும் இரட்சகரே
என்னை மீட்க வந்தவரே
என் அன்பு நேசரே -2
காலைதோறும் கிருபைகளால்
என்னை என்றும் நடத்துகிறீர்
கழுகு போல செட்டைகளால்
நித்தம் என்னை சுமக்கின்றீர் -2
2.ஏழை என்னை நினைத்தவரே
என் கரத்தை பிடித்தவரே
எதிரி கைகள் ஓங்கும் முன்னே
எனக்காய் யுத்தம் செய்தவரே -2
ஏழு மடங்கு அக்கினியோ
எதிர் வீசும் பெருங்காற்றோ
எதுவும் என்னை அணுகாமல்
எப்போதும் காத்தவரே -2
3.பிரயாணத்தில் மேடுகளும்
வழிநெடுகே பள்ளங்களும்
சோர்ந்துப்போக செய்தாலும்
பெலனடைய செய்தவரே -2
தடைகளெல்லாம் தகர்ப்பவரே
தாகம் தீர்க்கும் கன்மலையே
பாதம் கல்லில் இடறாமல்
பாதுகாத்த பரிசுத்தரே -2
4.நம்பி வந்த யாவருக்கும்
நன்மை செய்யும் நாயகரே
தேடி வந்த யாவரையும்
வாழ வைக்கும் வல்லவரே -2
துன்பங்களைக் கண்டோரை
துதித்து பாட செய்பவரே
மகிழ்ச்சி என்னும் மகுடத்தினால்
மகிமையாக்கி வைப்பவரே -2
5.கொன்று போட வந்தோரை
கொள்ளையாட செய்தவரே
கலங்கி நின்ற நேரங்களை
களிப்பாக்கி தந்தீரே -2
பறந்து காக்கும் பட்சியை போல்
என்னைக் காத்த இரட்சகரே
சுற்றி வந்த சேனைகளை
சுவாசமின்றி செய்தீரே -2
Appa Pithave Christian Song Lyrics in English
Appa pithave appa pithave
Appa pithave anbu nesare
Aayul muzhuthum kooda
Irukkum aaththuma nesare -2
1.Unnathaththil uyarnthavare
Ulagaiyaalum iratchagare
Ennai meetka vanthavare
En anpu nesare -2
Kaalai thorum kirubaigalaal
Ennai endrum nadaththukireer
Kazhugu pola settaigalaal
Niththam ennai sumakkindreer -2
2.Eazhai ennai ninaiththavare
En karaththai pidiththavare
Ethiri kaigal ongum munne
Enakkaai yuththam seithavare -2
Eazhu madangu akkiniyo
Ethir veesum perungatro
Ethuvum ennai anugamal
Eppothum kaththavare -2
3.Pirayaanaththil medugalum
Vazhi neduge pallangalum
Sornthu poga seithaalum
Belanadaiya seithavre -2
Thadaigalellam thagarppavre
Thaagam theerkkum kanmalaiye
Paatham kallil idaraamal
Paathukaththa parisuththare -2
4.Nampi vantha yaavarukkum
Nanmai seiyum nayagare
Thedi vantha yaavariyum
Vaazha vaikkum vallavare -2
Thunpangalai kandorai
Thuthithu paada seipavare
Magizhchchi ennum magudaththinaal
Magimaiyaakki vaippavare -2
5.Kondru poda vanthorai
Kollaiyaada seithavare
Kalangi nindra nerangalai
Kalippaakki Thantheere -2
Paranthu kakkum patchiyai pola
Ennai kaththa iratchagare
Sutri vantha senaigalai
Suvaasamindri seitheere -2
#Appaa Pidhavea, #Appa Pithaavea




Comments are off this post