Rev.Victor Vinoth – Vilaiyerapetra Um Rathathaiye Song Lyrics

Vilaiyerapetra Um Rathathaiye Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rev.Victor Vinoth

Vilaiyerapetra Um Rathathaiye Christian Song Lyrics in Tamil

விலையேறப்பெற்ற உம் இரத்தத்தையே -2
விலையாகத் தந்தீர் என்னை மீட்கவே
பரலோக இராஜா பரிசுத்த நாதா – 2
பாவம் போக்கும் பலியாக சிலுவையிலே மரித்தீர் -2

1)வானலோக வேந்தனவர் மண் மீது மனிதனானார்
மனதார சிலுவையில் தன்னையே தியாகம் செய்ய
தாகமெனத் தவித்தார் சர்வ சிருஷ்டி கர்த்தா
லோகபாவம் தீர்க்க குருசில் தொங்கி மரித்தார்-2

2)பாவமறியாத அவர் பாவமானார் சிலுவையிலே
பாவத்தில் இருந்த என்னை பரிசுத்தமாக்கிடவே
(சிலுவை) அன்பை பாடிட என்னில் வார்த்தையேயில்ல
உங்க அன்பை போலவே உலகில் அன்பேதுமில்லை

3)கடைசி துளி இரத்தத்தையும் நமக்காக சிந்தினாரே
இறுதி மூச்சையும் நமக்காக நிறுத்திக்கொண்டாரே
இவ்வளவாக தேவன் நம்மில் அன்புக்கூர்ந்தார்
தன் உயிரை பார்க்கிலும் நம்மை பெரிதாய் நேசித்தார்

4)எத்தனை சோதனைகள் என் வாழ்வில் வந்தாலும்
வாழ்ந்திடுவேன் நாளெல்லாம் எனக்காக மரித்தவர்க்காய்
மரணமே வந்தாலும் நான் பின் வாங்கவே மாட்டேன்
இறுதி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவரென்று

Vilaiyerapetra Um Rathathaiye Christian Song Lyrics in English

Vilaiyerapetra um Rathathaiye -2
Vilaiyaga thantheer ennai meetgave
Paraloga iraja parisutha natha -2
Pavam pokkum paliyaga siluvaiyile maritheer -2

1.Vanaloga venthanavar mann meethu manithananaar
Manathara siluvaiyil thannaiye thiyagam seiya
Thagamena thavithar sarva sirushdi karththta
Loga pavam theerkka kurusil thongi marithar

2.Pavamariyatha avar pavamanaar siluvaiyile
Pavathil iruntha ennai parisuthamakkidave
(Siluvai) Anpai padida ennil varthaiyeyilla
Unga anpai polave ulakil anpethumillai

3.Kadaisi thuli iraththathaiyum namakkaga sinthinare
Iruthi moochaiyum namakkaga niruthi kondare
Ivvalavaga thevan nammil anpu koornthar
Than uyirai parkkilum nammai perithaai nesithar

4.Eththanai sothanaigal en vazhvil vanthalum
Vazhnthiduven nalellam enakkaga marithavarkai
Maraname vanthalum naan pin vangave matten
Iruthi moochilum solven iyesu nallavarendru

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post