Thaveethin Oorinil 7 Christmas Song Lyrics

Thaveethin Oorinil 7 Tamil Christmas Song Lyrics.

Thaveethin Oorinil 7 Christian Song Lyrics in Tamil

தாவீதின் ஊரிலே தாழ்மையின் நாதனே
மாடடை குடிலிலே மகிமையின் ராஜனே

அவர் பிறந்தார் மனிதனாக
மனுவை மீட்போனாக

தன்னை கொடுத்தார் பாவம் போக்க
மண்ணில் உதிதாரே

அவர் உலகம் போற்றும் பாலன்
அவர் அகிலம் ஆழும் ராஜன்

விண்ணில் மாட்சி தோன்ற
இயேசு தாழ்மை ஏற்றாரே

தாழ்மை ரூபமே…….தரணி ஆழ்வாரே
நம்மை மீட்கவே……தன்னை தருவாரே

1. வான வேந்தன் வானம் பார்திடவே
வெள்ளி ஒன்று கண்டாரே

பாதை தேட தொழுவம் சென்றிடவே
வெள்ளி பின்னே சென்றாரே

படைத்தாரே பொன் வெள்ளை போழ தூபவர்க்கம்
பணிந்தாரே மனத்தாழ்மையாய்

கான மெய்ப்பரும் தூதன் சொன்ன செய்தி கேட்டு
பணிந்தாரே மனத்தூய்மையாய்

அவர் பிறந்த செய்தி கேட்டு
இந்த உலகம் மகிழ்ந்ததே

தாழ்மை ரூபமே…….தரணி ஆழ்வாரே
நம்மை மீட்கவே……தன்னை தருவாரே

2. பாரம் கொண்டு வாழும் மாந்தரையே
மீட்க பாலன் பிறந்தாரே

மாசில்லாத வாழ்வை வாழ்ந்திடவே
வானம் விட்டு வந்தாரே

வாழ்வோமே அவர் அன்பு பாதை ஏற்று
என்றும் வாழ்வோமே மனதாழ்மையாய்

பலியாகவே இயேசு தன்னை தாமே தந்த
அன்பை ஏற்போமே மனத்தூய்மையாய்

அவர் உலகை மீட்க பிறந்தார்
என்னும் நற்செய்தி கூறுவோம்

தாழ்மை ரூபமே…….தரணி ஆழ்வாரே
நம்மை மீட்கவே……தன்னை தருவாரே

Advertisement