Thozhuvinil Manuvaai Christmas Song Lyrics
Thozhuvinil Manuvaai Tamil Christmas Song Lyrics Sung By. Irwin Victoria.
Thozhuvinil Manuvaai Christian Song Lyrics in Tamil
தொழுவினில் மனுவாய் பிறந்தவரை
தொழுதிட ஆலயம் நுழைந்திடுவோம்
தந்தையின் மைந்தன் அழைக்கின்றார்
கந்தையில் பிறந்தவர அழைக்கின்றார்
வானவர் வரவில் மகிழ்ந்திடுவோம்
பலியினில் நாமும் கலந்திடுவோம்
1. தொழுவினில் பிறந்திட்ட தேவமகன்
ஒளியின் வழியாய் அழைக்கின்றார்
தூரத்தில் தூங்கிடும் இடையரையும்
தூதரின் மொழியில் அழைக்கின்றார்
அழைத்திடும் அவர் குரல் கேட்டிடுவோம்,
அழைப்பினை மனதினில் ஏற்றிடுவோம்
பழியினை அழித்திடப் பிறந்தவரை
தொழுதிட மனதினைத் திறந்திடுவோம்.
2. அன்னையின் மடியினில் தந்தைமகன்
அன்பின் வேதம் படிக்கின்றார்
விண்ணக விடியலாம் விந்தைமகன்
மீட்பின் பாதை விரிக்கின்றார்
மேய்ப்பனின் வழியினில் வாழ்ந்திடுவோம்
கிடையினில் ஆடுகள் சேர்த்திடுவோம்
வழியினைக் காட்டியே வாழ்ந்தவரின்
நெறியினில் வாழ்வினை அமைத்திடுவோம்
Comments are off this post