Va Va En Deva Christmas Song Lyrics
Va Va En Deva Tamil Christmas Song Lyrics Sung By. Srinisha.
Va Va En Deva Christian Song Lyrics in Tamil
வா வா என் தேவா
என் அகமெல்லாம் நீயாக எழுவாய்
நீவா என் நிறைவாய்
இனி எந்நாளும் எனை ஆளும் தலைவா
உன் குழந்தை நான் எனில் குழந்தையானாய்
உன் அடிமை நான் எனில் தஞ்சமானாய்
அருள் நிறைந்து அகமகிழ்ந்து
பாடும் எந்தன் நெஞ்சம் நன்றி தாலாட்டு என்றும்
1. வலிகள் தரும் வலிகள் எனது
என தெரிந்தும் நீ வலிய வந்தாய்
பயணம் அது கல்வாரி என
நீ அறிந்தும் இங்கு மனுவானீரே
தொலைதூரம் ஆனாலும் தொடர்ந்தாய்
என் இடரான பயணத்தில் இணைந்தாய்
எனை தேடி மகிழும் இறை அன்பே
என் மனசெல்லாம் நீதானே நிறைந்தாய்
எனக்காக பிறந்தாயோ இறைவா
புது விடியலாய் எனை அடைவதால்
புது புது ஆனந்தமாவேன்
2. இருளில் வாழும் நிலையானாலும்
அதில் ஒளிரும் வெண் நிலவானீரே
அலைகள் மோதும் வாழ்வானாலும்
கரை சேர்க்கும் கரிசன கடலானீரே
மனதோடு சேரும் காற்று
புது மணமாக வாசம் வீசும்
குழலோடு சேரும் காற்று
அது அழகான இசையாக பேசும்
குறையோடு வாழும் என்னில்
நீ எழுவதால் நிறைவடைவதால்
அகமெல்லாம் ஆனந்தமாவேன்
Comments are off this post