Vaaniley Oor Velli – Besky Job Christmas Song Lyrics

Vaaniley Oor Velli Tamil Christmas Song Lyrics. Sung By. Besky Job.

Vaaniley Oor Velli Christian Song Lyrics in Tamil

வானிலே ஓர் வெள்ளி வழி காட்டிட
வான தூதர் கூடி பாடி மகிழ்ந்திட
கானத்திலே ஆயர் காட்சி கண்டிட
இயேசு பாலன் பிறந்திட்டார் (2)

உன்னததில் மகிமை மண்ணிலே சமாதானம்
மாந்தர்மேல் பிரியமாம் என்று தூதர் பாடினார் (2)

1. ஆய்வமுள்ள ஞானியாரும் நாடு நகரம் பயணம் செய்து
பெத்தலையில் வந்து சேர்ந்தனர் (2)
பொன் போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி படைத்தனர்
சின்ன இயேசு பாலகனின் பாதம் விழுந்து பணிந்தனர் (2)

2. நமக்கு ஒரு பாலகனாம் நமக்கு ஒரு குமாரனாம்
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் (2)
அவர் நாமம் அதிசயமாம் ஆலோசனை கர்த்தாவாம்
வல்லமையுள்ள தேவனாம் சமாதான பிரபுவாம் (2)

3. யுத்தங்களின் சத்தம் ஓய சந்துருவின் ஆட்சி சாய
இத்தரையில் வந்து பிறந்தார் (2)
எத்திசையும் நீதி ஓங்க சத்தியத்தின் தேவன் அவர்
நித்திய வாழ்வளிக்க வந்து பிறந்தார் (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post