Vinnum Mannum Christmas Song Lyrics
Vinnum Mannum Tamil Christmas Song Lyrics Sung By. Kiruthika.
Vinnum Mannum Christian Song Lyrics in Tamil
விண்ணும் மண்ணும் மகிழும் பொன்னான நாள் இதுவே
பூவுலகு எங்கும் பூபாளம் கேட்கின்றதே!
பாலகன் பிறந்தார் மாடடைக்குடிலில்
மன்னவன் மலர்ந்தார் மாமரியின் மடியில் (2)
உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உண்டாகுதே
உலகினில் அவருக்கு உகந்தோருக்கு (இன்று) அமைதி உண்டாகுதே
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
1. ஊரெங்கும் பேரொளி அவர் மாட்சியே!
பாரெங்கும் இனிஎன்றும் அவர் ஆட்சியே…..
விடிவெள்ளி இவர்தானே அருள்வாழ்விலே
இருளில்லை ஒருபோதும் நம்வாழ்விலே (இனி) (2)
மறைபொருளாகிடும் விண்மலரே! மாதவமே… என் மாபரனே… (2)
பிறந்து வ… பிறந்து வா…. என் உள்ளக்குடிலில் பிறந்து வா….
Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas
2. திசையெங்கும் அவரது திருக் காட்சியே!
இனியெங்கும் நாம் என்றும் அவர் சாட்சியே…
உயிரூட்டும் அருளாளன் இவர்தானன்றோ
வலுவூட்டும் புதுவாழ்வு தருவாரன்றோ! – (என்றும்) (2)
திருஅவை வளம் தரும் அருள்நதியே! திருவருளே என் வானமுதே…
பிறந்து வா…. பிறந்து வா…. என் உள்ளக்குடிலில் பிறந்து வா….
Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas
Comments are off this post