Anbaray Kudungal Lyrics

Anbaray Kudungal Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Anbaray Kudungal Christian Song Lyrics in Tamil

அன்பரே கூடுங்கள்
ஆனந்தம் பாடுங்கள் – எம் பதன்
இயேசுவை என்றென்றும் நாடுங்கள்

1. நல்ல நாள் இதிலே
நாதனைப் பணியுங்கள் – செல்வ
பாக்கியம் தரும் சீமானைத் தேடுங்கள்

2. சுவிசேஷ பண்டிகை
சோபன தினமது – கவிபாடிப்
போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள்

3. வல்ல தேவன் நம்மோடு
வந்திட மன்றாடுங்கள் – தொல்லை
அணுகாமலே சுத்தன் அருள் செய்குவார்

4. கர்த்தரின் கட்டளைக்
கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்விய
இரட்சிப்பைக் கூறுவோம்

5. பக்தியாய் ஜெபித்து
பாடியேப் பூரிப்போம்
நித்த நாள் நம்மையே
நீடுழி வாழ்விப்பார்

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post