Pottuvoma En Deavanaiya Lyrics
Pottuvoma En Deavanaiya Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Pottuvoma En Deavanaiya Christian Song Lyrics in Tamil
போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே
1. துங்கன் இயேசுவே தூய உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்காப் புகழும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிடவேனும்
2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதன்னில் எம் பாவம் எறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மண்ணைதினிலே
3. பாவம் போக்கியே சாபம் மாற்றியே
ரோகம் தொலைத்தொனே
துரோகி என்னையே சுத்திகரித்த
தூய வேந்தனே
தூயா நேயா காயமாற்றியே
கருணாநிதியே பரிகாரியே
4. பாரில் என்னையே பிரிதேடுத்தொனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க
5. பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே
கானம் பாடியே துதித்திடுவேன்
Comments are off this post