Aanantha Paadalgal Paadiduven Lyrics
Aanantha Paadalgal Paadiduven Enthan Aathuma Nesarai Pugazhnthiduven Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Aanantha Paadalgal Paadiduven Christian Song Lyrics in Tamil
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் – 2
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்ல
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே – 2
1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்
2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரினில் என்னை வெற்றிச் சிறக்கச் செய்தே
3. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
பொற்பரன் சேவையின் சோகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே
4. கானானின் கரையிதோ காண்கின்றதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்
5. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்
6. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னரிடம்
Aanantha Paadalgal Paadiduven Christian Song Lyrics in English
Aanantha Paadalgal Paadiduven
Enthan Aathuma Nesarai Pugazhnthiduven – 2
Alaichalgal Yaavaium Agala Seithe
Nalla Meychalil Enthanai Magizha Seythey – 2
1. Meloga Naadenthan Sonthamathey
Intha Poologa Naatamum Kuraikintrathey
Maayaiyil Manamini Vaithidaamal – Nesar
Kaayamathai Enni Vaazhnthiduven
2. Nambikai Atronaai Alaintha Velai
Yesu Naadharen Pakamaai Vanthanarae
Paavangal Paarangal Parakka Seithey
Intha Paarathil Ennai Vetri Sirakka Seithey
3. Arputhamaam Avar Nesamathu – Enthan
Porparan Sevaiyin Sogamathu
Parpala Kirubaigal Pagarukintraar – Yezhai
Karpudan Avar Pani Seithidavae
4. Kaanaanin Karaiyitho Kaankintrathey – Enthan
Naadharin Thoni Kaathil Ketkintrathey
Kaalamini Ilai Unarnthiduvom
Viraivaaga Nam Oottathil Oodiduvom
5. Azhaithavarae Avar Unmaiulloar – Tham
Azhaipathil Vizhippudan Nirutha Valloar
Uzhaithiduvom Miga Vookamudan – Angu
Pizhaithidavae Anbar Samoogamathil
6. Jebamathai Ketidum Jeevanulla – Devan
En Pitha Aanathaal Aananthamae
Yeredupom Nam Idhayamathai
Entrum Maaraamal Pathil Tharum Mannaridam
Comments are off this post