Priya Hemesh – Thanga Kalanjiyame Song Lyrics
Thanga Kalanjiyame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Priya Hemesh
Thanga Kalanjiyame Christian Song Lyrics in Tamil
ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…
தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு
பூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்கு
எந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!
என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே!
1.அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்பு
உன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்
என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்
இன்று அன்னை மடியில் வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன! – எந்தன் மடி நீ பிறக்க…
2.அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன் பிள்ளை ஆவதேனோ!
சித்தம் என்று எண்ணியதால் சத்தம் இன்றி வந்தாயோ!
விண்ணில் யாவும் கொண்டபோதும் மண்ணில் வாழ வந்ததேனோ!
பாசமெல்லாம் வேண்டுமென்றே பாலகனாய் வந்தாய் போலும்! – எந்தன் மடி நீ பிறக்க…
Thanga Kalanjiyame Christian Song Lyrics in English
Aariro…Aariraro….Aariro…Aariraro….
Thanga kalanchiyame thangame kannurangu
Boomiye sonthangollum mannava kannurangu
Enthan madi nee pirakka enna thavam naan seithen!
Ennaiyalum mannavane unnai konchum pakkiyame!
1.Annai tharum muththathile moththamagum enthan anpu
Unnai thodum nenjaththile niththamagum unthan arul
Endrum alla kuraiyatha perungadale umathullam
Indru annai madiyil vanthu anpai thedum vinthaiyenna! – Enthan madi nee pirakka…
2.Annai unthan pillaiyendro enthan pillai aavatheno!
Siththam endru enniyathal saththam indri vanthaayo!
Vinnil yavum konda pothum mannil vaazha vanthatheno!
Pasamellam vendumendre palaganai vanthai polum! – Enthan madi nee pirakka…
Comments are off this post