Enakkaaga Christian Song Lyrics

Enakkaaga Enakkaaga Tamil Good Friday Song Lyrics Sung By. Pinky Milton.

Enakkaaga Christian Song Lyrics in Tamil

எனக்காக எனக்காக (4)

நீர் சிந்திய ரத்தம்
நீர் சிந்திய வியர்வை
நீர் பட்ட காயங்கள்
எனக்காக
எனக்காக எனக்காக

1. ஈட்டி எய்த மார்பில்
நானும் சாய்ந்திடுவேன் (2)
ஆணிகள் பாய்ந்த கரத்தில்
முகத்தை பதித்திடுவேன் (2)
முட்கள் குத்திய தலையில்
முத்தங்கள் தந்திடுவேன்

2. பார சிலுவையை சுமந்து கொண்டீர்
பாரம் நீங்கிடவே
சிலுவையை ஆவலாய் சுமந்தீர்
பாரம் நீங்கிடவே
அவமானம் ஏற்று கொண்டீர்
சிறப்பாய் வாழ்ந்திடவே (2)
ஜீவனையும் தந்தீர்
உமக்குள் பிழைத்திடவே

3. உறவு என்று சொன்னால்
நீர் தான் ஐயா (2)
உந்தன் அன்பிற்கு ஈடு
வேறே (இங்கே) யாரு உண்டு ஐயா (2)
உம்மை விட்டு பிரிந்து
வாழ முடியாதைய்யா

Other Songs from Good Friday Song Album

Comments are off this post