Janet Caroline – Aathi Muthal Song Lyrics

Aathi Muthal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By.Janet Caroline

Aathi Muthal Christian Song Lyrics in Tamil

ஆதி முதல் இருந்தவரே
ஆதியிலே வார்த்தையால் படைத்தவரே
சிறப்பான சிற்பமாய் என்னையுமே
செதுக்கினீரே உந்தன் சாயலிலே.

உருவாக்கின உம் கரங்களும்
உரு இழந்து தான் போனதோ
என்னை வரைந்திட்ட உம் கைகளில்
ஆணிகள் வரைந்ததோ.

நீண்ட ஆயுசுள்ளவரே ஜீவனின் அதிபதியானவரே
சுவாசத்தை ஊதினீர் எனக்காக ஜீவன் தந்தீர்

பரலோக தேவனவர்
பாவிக்காய் பரிகார பலியானீர்
கரையில்லா பரிசுத்த கரங்களினால்
பாவக் கறைகளையும் நீர் ஏற்றுக் கொண்டீர்.

ஓங்கிய உம் புயங்களும் ஒடுங்கியே நின்றதோ
பலத்த உம் கரங்களும் பெலன் இழந்து தான் போனதோ.

தேவனுக்கு சமமாய் இருப்பதையே
பொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரே
வெறுமையானீர் பரமனின் சித்தம் செய்ய
என் இடத்தை நீர் ஏற்றுக் கொண்டீர்.

மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே ஜெயம் எங்கே?
சாத்தானின் சதிகளை சிலுவையில் சிதைத்திட்டீர்.

Aathi Muthal Christian Song Lyrics in English

Aathi muthal irunthavare
Aathiyile varththaiyal padaithavare
Sirappana sirpamaai ennaiyume
Sethukkineere unthan sayalile

Uruvakkina um karangalum
Uru izhanthu than ponatho
Ennai varainthitta um kaigalil
Aanigal varainthatho

Neenda aayusullavare jeevanin athipathiyanavare
Suvasathai oothineer enakkaga jeevan thantheer

Paraloga thevanavar
Pavikkaai parikara paliyaneer
Karaiyilla parisutha karangalinal
Pava karaigalaiyum neer eatru kondeer

Ongiya um puyangalum odungiye nindratho
Palaththa um karangalum pelan izhnthu than ponatho

Thevanukku samamaai iruppathaiye
Poruttaaga ennaamal thazhthineere
Verumaiyaneer paramanin sitham seiya
En idathai neer eatru kondeer

Maraname un koor enge?
Pathalame jeyam enge?
Sathanin athigalai siluvaiyil sithaithitteer

Other Songs from Good Friday Song Album

Comments are off this post