Kalvari Malaiyin Thalaiyinile – Xavier Song Lyrics
Kalvari Malaiyin Thalaiyinile Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By. Xavier
Kalvari Malaiyin Thalaiyinile Christian Song Lyrics in Tamil
கல்வாரி மலையின் தலையினிலே
மூன்று சிலுவைகள் முளைத்தனவே
வலிகள் உயிரைத் துளைக்கையிலே
மீட்பின் கதவுகள் திறந்தனவே
பேரின்ப வீட்டில் நீர் இருப்பீர்
என்னோடு இன்றே நுழைந்திடுவீர்
1.கர்வம் ஒருவனை வீழ்த்தியதே
தாழ்மை ஒருவனை மீட்கிறதே!
எனையும் நினையும் என்றானே
உனையும் அணைப்பேன் என்றாரே
மரணம் தூண்டில் வீசுகையில்
எல்லாம் இருளாய் தோன்றுகையில்
இறைவன் அருகில் வந்திடுவோம்
அவரது அருளில் வாழ்ந்திடுவோம்
2.பாவம் எத்தனை கொடிதெனினும்
பாதம் வருவோம் பணிவுடனே
சட்டம் எதுவும் தேவையில்லை
சத்தியம் அருகில் இருக்கையிலே
முதலாம் வாய்ப்பாய் முளைப்பதுவே
கடைசி வாய்ப்பாய் மாறிடலாம்
இன்றே இறைவனை நெருங்கிடுவோம்
மீட்பின் உறுதியைப் பெற்றிடுவோம்
Kalvari Malaiyin Thalaiyinile Christian Song Lyrics in English
Kalvaari malaiyin thalaiyinile
Moondru siluvaigal mulaiththanavae
Valigal uyirai thulaikkaiyile
Meetpin kathavugal thiranthanave
Perinba veettil neer iruppeer
Ennodu indre nuzhainthiduveer
1.Karvam oruvanai veezhththiyathe
Thaazhmai oruvanai meetkirathe!
Enaiyum ninaiyum endraane
Unaiyum anaippean endraare
Maranam thoondil veesugaiyil
Ellaam varuvom panivudane
Sattam ethuvum thevaiyillai
Saththiyam arugil irukkaiyile
Muthalaam vaayppaai mulaippathuve
Kadaisi vaaippaai maaridalaam
Indre iraivanai nerungiduvom
Meetpin uruthiyai petriduvom



Comments are off this post