Kolkathaa Meattinilea Koduura Lyrics
Artist
Album
Kolkathaa Meattinilea Koduura Tamil Christian Song Lyrics From the Album Good Friday Song.
Kolkathaa Meattinilea Koduura Christian Song in Tamil
கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவ குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்
1. பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்
2. மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்
3. இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்
4. கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பி னிலே
5. உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்
Comments are off this post