Vaanam Thiranthu Boomi Vantha Christmas Song Lyrics

Vaanam Thiranthu Boomi Vantha Tamil Christmas Song Lyrics Sung By. Jafi Isaac.

Vaanam Thiranthu Boomi Vantha Christian Song Lyrics in Tamil

வானம் திறந்து பூமி வந்த
வான்புகழ் இயேசுவை பாடிடுவோம்
மனுமக்களின் பாவம் நீக்க
தன்னுயிர் தந்தாரே பாடிடுவோம்

1. உன்னதத்தில் என்றும் மகிமையாம்
பூவுலகில் மா சமாதானமும்
மனிதர்மேல் பிரியம் உண்டாகும் என்று
வானவர் பூமானை வாழ்த்தினாரே

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

2. கன்னியின் மடியில் பாலகனை
கண்ணாரக் கண்டு களித்திடவே
விண் தூதர் கீதம் வானிலே கேட்டு
மேய்ப்பர்கள் பூமானை பணிந்தனரே

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

3. புல்லணையில் உதித்த அதிசயம்
தன்னலம் துறந்த அற்புதம்
காரிருள் நீக்கி அறிவொளி வீச
பாரினில் வந்தாரே பாடிடுவோம்

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

Advertisement